பேசாத பொம்மை சொல்லும் சோகக் கதை: செம்மணியின் ஆழங்கள்
பேசாத பொம்மை சொல்லும் சோகக் கதை: செம்மணியின் ஆழங்கள். தி. டிலக்சன் மனித வரலாற்றின் இருண்ட பக்கங்களில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத துயரங்களும் காலத்தால் அழியாத வலிகளும் புதைந்து கிடக்கின்றன. அந்தப் பக்கங்களில் ஒன்றுதான் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள செம்மணி என்ற நிலப்பரப்பு. அங்கு கண்டெடுக்கப்பட்ட ஒரு குழந்தையின் பொம்மை வெறும் விளையாட்டுக் கருவியாக இல்லாமல் கண் விழித்த சாட்சியாக நின்று செம்மணியின் ஆழங்களில் புதைந்துள்ள ஒரு சோகக் கதையை உலகுக்கு உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறது. அந்தப் பொம்மை உருக்குலைந்த நிலையில் மண்ணின் நிறம் பூசி ஒருபுறம் நீலமும் மறுபுறம் செம்மண்ணின் தடயங்களுமாய் கிடக்கிறது. ஆனால் அதன் கண்களைப் பாருங்கள் அவை இன்னும் திறந்திருக்கின்றன. ஒரு குழந்தையின் கைகளில் தவழ்ந்து அதன் சிரிப்புக்கும் துள்ளலுக்கும் சாட்சியாய் இருந்திருக்க வேண்டிய அந்தப் பொம்மை இன்று ஒரு பெரும் துயரத்தின் குறியீடாக மாறி நிற்கிறது. செம்மணி மனிதப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான எலும்புக் கூடுகளுக்கு மத்தியில் ஒரு மழலையின் அடையாளம் என்னவாக இருக்க முடியும்? இந்தக் கேள்விக்கு ...