Posts

Showing posts from December, 2025

இந்திய -இலங்கை மீனவர் பிரச்சினையும் பூகோள அரசியல் யதார்த்தமும் !

Image
இந்தியா-இலங்கை இடையேயான மீனவர் பிரச்சினையானது பல தசாப்தங்களாக நீட்சியடைந்த ஒன்றாக காணப்படுதின்றது. தற்காலத்தில் இலங்கையின் வட பகுதியில் போராட்டமாக மாறியிருகின்றது. 12.12.2025 யாழ்பாணத்தில் மீனவர் சங்கங்கள் மற்றும் மீனவர்கள், இந்திய மீனவர்கள் அத்துமீறி தமது கடற்பரப்பிற்குள் மீன்பிடிப்பதாகவும் தமது மீன்பிடி வலைகளை அழிப்பதாகவும், சூறையாடுவதாகவும் கூறி கடல் தொழில் நீரியல் வள திணைக்களத்தின் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்டத்தின் போது கடல் தொழில் நீரியல் வள திணைக்களத்தின் யாழ் மாவட்ட உதவி பணிப்பாளர் கிரிஷ்னன் அகிலனிடமும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடமும் தமது பிரச்சினை அடங்கிய கோரிக்கை மகஜரை கையழித்தனர். இதன்போது தமது வளத்தை இந்திய மீனவர்கள் இழுவை, மடி படகை பயன்படுத்தி சுரண்டுவதாகவும், தங்களுடைய தொழிலையும் வாழ்வாதாரத்தையும் அழிப்பதாகவும் தெரிவித்தனர். இந்த ஆர்பாட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த என்.பி.பி உறுப்பினர் யாழ்பாணத்தில் இருக்கும் இந்திய துணை தூதரகம் மீனவர் பிரச்சினை தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இந்த தூதரகம் யாழ்பாணத...

மலையகத்திற்கான மாற்றுத்திட்டங்களும் அரச பலவீனத்தின் தொடர்ச்சியும்!

Image
நவம்பர் இறுதியில் இலங்கையில் ஏற்பட்ட டிட்வா புயல் இதுவரை காலமும் இல்லாத அளவிற்கு பேரழிவுகளையும், மறக்கமுடியாத நினைவுகளையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த புயலால் இலங்கை பூராகவும் 630இற்கு மேற்பட்டோர் உயி ரிழந்ததாகவும் 200இற்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் 5300இற்கு மேற்பட்ட வீடுகள் முழுமையாகவும் 86800இற்கு மேற்பட்ட வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலை யம் அறிவித்தது. இதில் அரைவாசிக்கு மேற்பட்டோர் மலையக மண்சரிவினால் உயிரிழந்தும் காணாமலும் வீடுகளை இழந்தும் உள்ளனர். இக்கட்டுரையும் மலையக மக்களின் அனர்த்த பாதிப் புக்களுக்கு தீர்வான நகர்வுகள் பற்றிய தேடலை முதன்மைப்படுத்துகிறது. மலையக மக்கள் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தோட்டத் தொழிலுக்காக இந்தியாவில் இருந்து அழைத்துவரப் பட்டவர்கள். இன்று வரை இலங்கையில் குடியுரிமையின்மை, காணி, வீடு இன்மை, தோட்ட தொழிலுக்கான சரியான ஊதியமின்மை, தமது தேவையை மேற்கொள்ள தாய்மொழி சிக்கல், அரச அடக்குறை, புறக்கணிப்பு, பாரபட்சம் என அரசியல் துயரங்களை அனுபவிக்கும் நிலையிலும் இயற்கை அனர்த் தங்கள் அத்துயரத்திற்கு வலுச்சேர்க்கின்றது. இந...

இந்தியாவின் ஆபரேஷன் சாகர் பந்துவின் அரசியல் பரிமாணம்?

Image
சர்வதேச அரசியலில் மனிதாபிமான உதவி நடவடிக்கைகள் மென் அதிகாரம் (soft power) மற்றும் புவிசார் அரசியல் (Geopolitics) என்பவற்றில் முக்கிய கருவியாக மாறிவிட்டது. குறிப்பாக உலக நாடுகள் தங்கள் அண்டை நாடுகளுடனான உறவுகள், பேரிடர் மேலாண்மை, பாதுகாப்பு, கடற்பாதுகாப்பு என்பன உதவி மற்றும் பரஸ்பர ஒற்றுமையை வெளிப்படுத்துகின்றதாக உள்ளது. இது இராஜதந்திர செயற்பாட்டிற்கான நகர்வாகவும் புரிந்து கொள்ளப்படுகிறது. இத்தகைய தன்மையினை வெளிப்படுத்தும் ஒன்றாகவே இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முதலிடம் கொள்கை (Neighborhood first policy)  காணப்படுகின்றது. இலங்கையின் (நவம்பர் 28,29 2025) பல பகுதிகள் டித்வா (Cyclone Ditwah) புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட செயல்பாடானது பொருளாதார ஒத்துழைப்பைக் கடந்து  இராஜதந்திர நகர்வுக்கு வழிகோலுகின்றது.இப்பின்ணனியில் இக்கட்டுரையும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் மூலம் பிராந்தியத்தில்  நட்புறவை நிறுவுகிறதென்பதை தேடுவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முதலிடக் கொள்கை பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் 2014ஆம் ஆண்டு முதன்முதலில் பதவியேற்றபோது மு...