Posts

கல்லறைத் தோட்டத்தில் ஓர் உயிரின் சாட்சி: செம்மணியின் பால் புட்டி.

Image
கல்லறைத் தோட்டத்தில் ஓர் உயிரின் சாட்சி: செம்மணியின் பால் புட்டி. தி. டிலக்சன் யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி... இலங்கை இனப் போராட்ட வரலாற்றில் ஆறாத வடுவாக நிலைத்து நிற்கும் ஒரு பெயர். வார்த்தைகளால் சொல்ல முடியாத சோகத்தையும் மூடி மறைக்கப்பட்ட உண்மைகளையும் சுமந்து நிற்கும் இந்த மண், அண்மைக் காலங்களில் மீண்டும் அகழ்வாராய்ச்சிகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு அகழ்விலும் வெளிப்படும் எலும்புக்கூடுகளும், துணிக்கப்படாத மனித எச்சங்களும், இழைந்துபோன கனவுகளின் சாட்சிகளாக நம்மை உலுக்கி வருகின்றன. இந்த அலைகளில் குறிப்பாக ஒரு சிறு குழந்தையின் பால் புட்டி கண்டெடுக்கப்பட்டது வெறும் ஒரு பொருள் அல்ல; அது அநியாயமாகப் பறிக்கப்பட்ட ஓர் இளம் உயிரின் மௌன சாட்சியம். ஒரு தேசத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்ப வந்திருக்கும் ஒரு குறியீடு. 1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் இலங்கைப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் அப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக பல மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தக் குற்றச்சாட்டுகளின் உச்சகட்டமாக 1999 ஆம் ஆண்டு இராணுவ சிப்பாய் சோமரத்ன ராஜபக்ச என்பவன் அளித...